General செக்ஸ் விஷயத்தில் பெண்கள் முன்னெடுத்து தொடங்குவதையே ஆண்கள் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்

Member

0

0%

Status

Offline

Posts

671

Likes

289

Rep

0

Bits

2,481

4

Years of Service

LEVEL 3
150 XP
எப்போதுமே, முத்தம் கொடுப்பதன் மூலமாக, அணைப்பதன் மூலமாக, பாலியல் உறவில் ஈடுபட இருப்பதை ஆண்கள் தான் விருப்பத்தை முதலில் தெரிவிக்கிறார்கள். பெண்கள் வெட்கப்பட்டு, தயக்கமாக இருந்த காலம் எல்லாம் போய்விட்டது.[/H2]


பெண்கள் இதையெல்லாம் செய்தால் ஆண்களுக்கு பிடிக்கும் என்று பெரிய பட்டியலே இருக்கிறது. பாலியல் உறவைப் பொறுத்தவரை தற்போது வரை பல விதமான கேள்விகளும் சந்தேகங்களும் உள்ளன. குறிப்பாக, தன்னுடைய பார்ட்னரின் விருப்பு வெறுப்புகள் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். பாலியல் உறவில், ஆண்கள் தன்னுடைய பார்த்னரே, பாலியல் உறவை தொடங்க வேண்டும், அவர்களின் விருப்பத்தை முதலில் வெளிப்படுத்தா வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

எப்போதுமே, முத்தம் கொடுப்பதன் மூலமாக, அணைப்பதன் மூலமாக, பாலியல் உறவில் ஈடுபட இருப்பதை ஆண்கள் தான் விருப்பத்தை முதலில் தெரிவிக்கிறார்கள். பெண்கள் வெட்கப்பட்டு, தயக்கமாக இருந்த காலம் எல்லாம் போய்விட்டது. எப்போதுமே லேடீஸ் ஃபர்ஸ்ட் என்று சொல்வதைப் போல, பாலியல் விருப்பத்தையும் பெண்களிடம் இருந்து முதல் 'மூவ்' இருக்க வேண்டும் என்பதை பெரும்பாலான ஆண்கள் விரும்புகிறார்கள். இதனால், வழக்கத்தை விட தம்பதிகளின் நெருக்கம் மற்றும் செக்ஷுவல் லைஃப் ஆக்டிவாக இருப்பதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆய்வின் முடிவுகள்

நார்வேஜியன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைகழகத்தின் ஆய்வாளர்கள், இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். 18 வயது முதல் 30 வயது வரை, 92 ஜோடிகள் ஆய்வில் பங்கேற்றனர். இந்த ஜோடிகள் குறைந்தபட்சமாக ஒரு மாதம் முதல் அதிகமாக ஒன்பது ஆண்டுகள் வரை ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். மேலும், இந்த ஜோடிகள் வாரத்தில் இரண்டு முதல் மூன்று நாட்களாவது செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். பல்வேறு தரவுகளின் அடிப்படையில், இந்த ஜோடிகளில், பெண்கள் பாலியல் உறவை இனிஷியேட் செய்தால், பாலியல் உறவில் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

பெண்கள் தன்னுடைய பார்ட்னரால் பெரிதாக ஈர்க்கப்பட்டால், அவர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல், வெட்கப்படாமல் தங்கள் பாலியல் விருப்பத்தை வெளிப்படுத்துவார்கள். அது மட்டுமல்லாமல், கேஷுவல் செக்ஸில் தங்கள் பார்ட்னருடன் ஈடுபட விரும்பும் பெண்கள், இதில் முதல் மூவ் வெளிப்படுத்துவதில் தயங்குவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

உடலுறவு கொள்வது பற்றிய தெளிவான கண்ணோட்டம் இருந்தால், எந்த விதமான சூழலாக இருந்தாலும், பெண்கள் அதை பொருட்டாக நினைப்பதில்லை. மேலும், ஒரு கமிடட் உறவில் இருக்கும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகள் இருப்பதால், எதேச்சையாக நடக்கும் சண்டைகள், வாக்குவாதங்கள் ஆகியவை பெண்களை பாதிக்கும். எனவே, கேஷுவல் செக்ஸ் என்று கமிட்மென்ட் இல்லாத உறவில், பெண்களுக்கு பாலியல் உறவில் தானாக முன்வர சுதந்திரம் அதிகமாக இருக்கிறது.

ஆண்களுக்கு ஏன் தங்கள் ஆளுமையை வெளிப்படுத்திக் கொள்ளும் பெண்களை அதிகம் பிடிக்கிறது

பாலியல் உறவு மட்டுமல்ல, பல விஷயங்களில் பெண்கள் முதல் முயற்சி செய்வது, முடிவெடுப்பது, ஆலோசனைகள் சொல்வது ஆகியவற்றை ஆண்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு செய்யும் போது, பெண்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், ஆளுமையை அழகாகக் காண்பிக்கும். பாலியல் உறவில் ஆண்கள் டாமினேட் செய்வது போலவே, சில ஆண்களுக்கு பெண்கள் டாமினேட் செய்வதும், பெண்களால் பாராட்டப்படுவதும் மிகவும் பிடிக்கும்.
 
samravi's SIGNATURE

56,787

Members

330,943

Threads

2,763,919

Posts
Newest Member
Back
Top